இயேசுகிறிஸ்துவை நம்மில் பிரதிபலிக்க வேண்டும்

பிரைனின் அண்ணன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு காலடி எடுத்து வைக்கும் முதல் நாள் அன்று. காலையில் எழும்பியதிலிருந்தே கண்ணாடி முன் நின்று அப்பா அவனுக்கு வாங்கிக்கொடுத்திருந்த தங்கச்செயினை கழுத்தில் போட்டு அழகு பார்த்துக்கொண்டிருந்தான்.

கழுத்தோடு ஒட்டிய அந்தச்செயினின் மத்தியில் ஒரு அழகான சிலுவையும் பளபளத்து தொங்கிக்கொண்டிருந்தது.

ஏண்ணா இவ்வளவு சின்னதா கழுத்தை ஒட்டி இந்தச் செயினை செய்து போட்டிருக்கிறாய் என்று பிரைன் அண்ணனைப் பார்த்துக் கேட்டான்.

கழுத்தோடு ஒட்டிய செயினை போட்டால்தான் சிலுவை வெளியில் தெரியும், அப்பொழுது தான் நான் கிறிஸ்தவன்னு நாலு பேருக்குத் தெரியும் என்று பிரைனின் அண்ணனின் பதில் கெம்பீரமாக வந்தது. அப்பொழுது பிரைனுக்கு அவனுடைய ஞாயிறு பள்ளி ஆசிரியர் சொல்லிக்கொடுத்த

“ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” (லூக். 9:23)

என்ற வசனம் ஞாபகத்திற்கு வந்தது.

உடனே பிரைன் அண்ணனைப் பார்த்து, அண்ணா சிலுவை என்பது நாம் கிறிஸ்துவுக்காக அநுதினமும் ஏற்றுக்கொள்கிற பாடுகளையும் கஷ்டங்களையும் குறிக்கிறது.

அவர் காட்டிய வழியில் நாம் நடக்கும் போது பல இன்னல்கள் நமக்கு நேரிடலாம். ஆனாலும் நாம் அவற்றை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு இயேசுகிறிஸ்துவை நம்மில் பிரதிபலிக்க வேண்டும்.

அப்பொழுது நம்மைக்காண்கிறவர்கள் இயேசுகிறிஸ்துவின் சாயலை நம்மிலே கண்டு அவர்களும் இயேசுவை ஏற்றுக்கொள்வார்கள்.

கிறிஸ்தவன் என்ற பெயரும் நம்முடைய செயலிலே வெளிப்படும். வெறுமனே தங்கத்தில் சிலுவையை செய்து செயினில் தொங்கவிட்டுக்கொண்டு, நான் கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்தவள் என்று சொல்வதில் ஒரு பிரயோஜனமுமில்லை என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தான்.

வழக்கம் போல அவனுடைய அண்ணன் பிரைனை பார்த்து இதற்கு மேல் ஒன்றும் பேசாதே என்பது போல கோபத்தோடே பார்த்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பிச்சென்று விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !! Use Download button in the bottom.