எழுப்புதல் கூட்டம்

பிரைனின் ஊர் பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து வருட இறுதியில் ஒரு மாபெரும் எழுப்புதல் கூட்டம் வைக்கலாம் என்று முடிவெடுத்து அதற்கான இடம் மற்றும் தியதியை கர்த்தரிடம் விசாரிப்பதற்காக அன்று ஒரு ஜெபகூடுகையை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

பிரைனின் அப்பாவும் அதில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதால் அவரோடு கூட பிரைனும் சென்றிருந்தான். ஜெபத்தில் கர்த்தர் தீர்க்கதரிசனமாக அதற்கான இடம் மற்றும் தேதியை அவர்களுக்குச் சொன்னார்.

எல்லோரும் மிகவும் சந்தோசமாக ஜெபக்கூடுகையை முடித்தனர். அடுத்து கன்வென்சனில் மிகப்பிரபலமான ஒரு நற்செய்தியாளரை கொண்டு பேசவைத்தால் நல்லது என்று அவர்கள் முடிவெடுத்து அதற்காக ஒரு குறிப்பிட்ட நற்செய்தியாளரை தொடர்புகொண்டார்கள்.

அவருக்கும் அங்கு வந்து செய்தியளிக்க ஆசை ஆனால் அந்த குறிப்பிட்ட தேதியில் தனக்கு ஏற்கெனவே வேறொரு இடத்தில் கூட்டம் இருப்பதால் ஜனவரி மாதத்தில் தேதி தருவதாக கூறினார்.

குழுவினரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுத்து சற்று நேரத்தில் மீண்டும் தொலைபேசியில் அழைக்கிறோம் என்று சொல்லிவிட்டு அவர்களுக்குள் அதைப்பற்றி விவாதித்தனர்.

அங்கிருந்த பலருக்கும் அந்த குறிப்பிட்ட ஊழியக்காரரை அழைப்பதில் தான் ஆர்வம் அதிகமாக இருந்தது.அதில் ஒருவர் “கடவுள் எந்த நாள் கூட்டம் வைத்தாலும் நம்மோடு இருப்பார் ஆகவே அந்த மிகப்பிரபலமான ஊழியக்காரரின் தேதிக்கேற்றபடி நாம் கூட்டத்தின் தேதியை மாற்றி வைப்பதில் ஒன்றும் தவறில்லை” என்று முன்மொழிய மற்றவர்கள் எல்லோரும் அதற்கு ஏக மனதாக சம்மதித்தனர்.

நடந்தவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த பிரைன் தன் அப்பாவின் அருகில் வந்து கேட்டான் “ஏன் அப்பா தேதிக்காகவும் இடத்திற்காகவும் கர்த்தரிடம் விசாரித்த நீங்கள் கூட்டத்தில் நற்செய்தி கொடுப்பதற்கு யாரை அழைக்க வேண்டும் என்பதையும் கர்த்தரிடமே கேட்டிருக்க வேண்டியதுதானே?

கர்த்தர் கொடுத்த தேதியை விட இப்பொழுது உங்களுக்கு நற்செய்தியாளர் கொடுத்த தேதி முக்கியமாகி விட்டதா?

கர்த்தருடைய வார்த்தையை மதிப்பதைவிட மனிதனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிஞ்சி விட்டதா? இப்படிப்பட்ட முடிவை கர்த்தர் விரும்பி அந்த கூட்டத்தில் செயல்படுவார் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?”

என்று தொடர்ந்து பேசிக்கொண்டே சென்ற பிரைனை பிடித்து ஓரமாக தள்ளிவிட்டு அந்த நற்செய்தியாளரை அழைத்து அவருடைய வசதிக்கேற்றபடி ஜனவரியிலேயே கூட்டத்தை வைத்துவிடலாம் என்று சொல்வதற்காக தொலைபேசியை எடுத்து காதில் வைத்தார் பிரைனின் அப்பா.

மதிப்பதைவிட மனிதனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிஞ்சி விட்டதா? இப்படிப்பட்ட முடிவை கர்த்தர் விரும்பி அந்த கூட்டத்தில் செயல்படுவார் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?”

என்று தொடர்ந்து பேசிக்கொண்டே சென்ற பிரைனை பிடித்து ஓரமாக தள்ளிவிட்டு அந்த நற்செய்தியாளரை அழைத்து அவருடைய வசதிக்கேற்றபடி ஜனவரியிலேயே கூட்டத்தை வைத்துவிடலாம் என்று சொல்வதற்காக தொலைபேசியை எடுத்து காதில் வைத்தார் பிரைனின் அப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !! Use Download button in the bottom.