Friend Request

“ஹே…. என்னோட ‘Friend Request’ ஐ accept பண்ணிடார்டா, இதவிட எனக்கு இனி என்ன வேண்டும் இந்த உலகத்தில” என்று laptop-ஐ பார்த்தவாறே கத்திகொண்டிருந்த அண்ணனை, உறக்கக்கலக்கத்தில் மிரட்சியோடே எழும்பிப் பார்த்தான் பிரைன்.

கடிகாரத்தைப் பார்த்தான், அதிகாலை 2 மணி. இதுவரையிலும் உறங்காமல் Laptop-ல் ஏதோ செய்துகொண்டிருந்த அண்ணனிடம் “ஏண்டா இயேசப்பா உன்னிடம் ஏதாவது பேசினாரா, ஒருநாளும் இல்லாமல் இந்த நடு ராத்திரியில இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாயே?” என்று கேட்டான் பிரைன்.

பிரைனை ஏளனமாக பார்த்த அவன் அண்ணன், “நீ சின்னப்பையன்டா, உனக்கு இந்த உலகில் என்ன நடக்கிறது என்றே தெரியாது.

நம்ம மாநிலத்திலேயே புகழ்பெற்ற worship leader ‘Rock ஏஞ்சல்சன்’ என்னோட ‘friend request’ ஐ Facebook-ல் accept பண்ணிட்டார்டா. ‘friend request’ கொடுத்திட்டு 2 வாரமா இராத்திரி பகல் விடாம 24 மணி நேரமும் online-ல இருந்து எப்படா என்னோட ‘request’-ஐ ஏற்றுக்கொள்வார்ன்னு தவம்கிடந்தேண்டா.

என்னோட கனவு இப்பொழுது நிறைவேறிவிட்டது. உலகம் தெரியாதவண்டா நீ, பேசாம தூங்குடா” என்றான்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த பிரைன், “நீ பிறந்த அன்றிலிருந்து, உனக்காக தன்னுயிரைக் கொடுத்த இயேசு கிறிஸ்து வாசல்படியில் நின்றுகொண்டு தட்டிக்கொண்டிருக்கிறார்.

அவருடைய ‘friend request’ ஐ உனக்கு இன்றைக்கு வரைக்கும் accept பண்ணி அவரை முழுமனதோடு உன்வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள மனதில்லை.

யாரோ ஒருத்தர் பாழாப்போன Facebook-ல ‘Rock ஏஞ்சல்சன்’ னு பேரவைச்சிக்கிட்டு ஆளு சேர்த்துகிட்டு உங்களையெல்லாம் முட்டாளாக்கிட்டு இருக்கான், அவனுக்காக நடுராத்திரியில நீ தூங்காம கத்திக்கிட்டு இருக்கிறாயே. இப்படியே போ, இயேசுகிறிஸ்துவின் நியாத்தீர்ப்பின் நாளிலே அந்த Original Rock ஏஞ்சல்சனே உன்னைப்பார்த்து ‘என்றைக்குடா நான் உன்னைக் கண்டேன்’ என்று சொல்லி இயேசுகிறிஸ்துவின் அருகில் நின்று உன்னைப்பற்றி குற்றம் சாட்டுவார்.

அவர் பரலோகத்தில் இருப்பார், நீ நரகத்தில் தள்ளப்படுவாய். உலகத்தின் பின்னால் போவதை விட்டுவிட்டு, வாசல்படியில் நின்று தட்டும் அனபர் இயேசுவோட ‘friend request’ ஏற்றுக்கொண்டு பரலோகம் போய் சேரும் வழியைப்பாடுடா” என்று ஒரே மூச்சில் பேசிவிட்டு அடுத்தப்பக்கமாக திரும்பி படுத்துக்கொண்டான் பிரைன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !! Use Download button in the bottom.