இளமையை காத்துக்கொள்வது எப்படி?

உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. 1 திமோத்தேயு 4:12

நம்முடைய வாலிப நாட்களை எப்படி வாழ வேண்டும்?

அப்போஸ்தலனாகிய பவுலை ஒப்பிடும்போது தீமோத்தேயு வயதில் மிகவும் சிறியவனாக இருக்கிறார். ஆகவே பவுல் தீமோத்தேயுவிற்கு இள வயதில் சிறந்த வாழ்க்கை வாழ்வது எப்படி மற்றும் பிற விசுவாசிகளுக்கு முன்பாக எடுத்துக்காட்டாக வாழ்வது எப்படி என்பதை குறித்து சில அறிவுரைகளை கொடுக்கிறார். நாம் வாலிபர்களாக இருக்கும்போது இந்த உலகத்தின் இச்சைகள் நம்மை கவர்ந்து கொண்டே இருக்கும். பிசாசானவன் இயேசுவை சோதித்தபோது அவரை நோக்கி

இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உனக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்டருக்கிறது:எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். லூக்கா 4:6

இந்த வசனங்களை கவனமாக வாசிக்கும்போது நமக்கு தெளிவாக தெரிகிறது இத்த உலகமும் இதுலுள்ளவைகளும் சாத்தானால் கட்டுப்படுத்தப்படுகிறது, இந்த உலகத்தின் மாயைகள் அனைத்தும் சாத்தனுடையவை. ஆகவே நாம் இந்த உலகப்பிரகாரமான அற்ப காரியங்களுக்காக விழுந்துபோக கூடாது, அவன் நம்மை மேற்க்கொள்ள அநேக உலகப்பிரகாரமா காரிங்களை நம்முன் கொண்டுவருவான். நம்மை இந்த உலகத்திலிருந்து காத்துக்கொள்ள, பிறருக்கு ஒரு உதாரணமாக வாழ்வதற்கு, 6 காரியங்களை பவுல் தீமோத்தேயுவிற்கு சொல்லுகிறார்.

1. நம்முடைய வார்த்தைகள்.

கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம், பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்கு பிரயோகனமுண்டாகும்படிக்கு பேசுங்கள். எபேசியர் 4:29மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்: அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள் 18:21

2. நம்முடைய பேச்சில்

மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்: புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான். நீதிமொழிகள் 15:21

3. நம்முடைய செயல்களில்

ஆதலால், கர்த்தர்நிமித்தமும் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைப்புக்குக் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதாயாருங்கள். எபேசியர் 4:1-3

4. ஆவியில்

எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான். சங்கீதம் 32:2ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். ஏசாயா 66:2

5. விசுவாசத்தில்

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்: ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறாரென்றும் விசுவாசிக்கவேண்டும். எபிரேயர் 11:6

6. நம்முடைய கற்பில்

நான் உங்களுக்குக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்யமான வைராக்யகிங்கொண்டிருக்கிறேன். 2 கொரிந்தியர் 11:2

2 thoughts on “இளமையை காத்துக்கொள்வது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !! Use Download button in the bottom.