கர்த்தரை தேடினால் கிடைக்கும் ஞானம்

மணி நான்கு ஆகுதடா, உன்னை நான் எத்தனை முறை எழுப்பறது என்று அதிகாலையில் உறங்கிக்கொண்டிருந்த பிரைனின் அண்ணனை உருட்டி எழுப்பிக்கொண்டிருந்தார்கள் அவனுடைய அம்மா.

மணி நான்கு பதினைந்தானது, இன்னும் அயர்ந்த நித்திரையில் இருந்தான் பிரைனின் அண்ணன்.

அவன் அம்மா வந்து பதமாக இரண்டு உதைவிட்டு “நான்கரை மணிக்கு டியூசனுக்கு போகவேண்டும், இன்னும் என்னடா உனக்கு உறக்கம்” என்று சொல்லி மறுபடியும் அவனை கட்டாயப்படுத்தி எழுப்பிவி;ட்டார்கள்.

“படிக்கிறது பத்தாம் வகுப்பு, அதிகாலையில் எழும்பி டியூசனுக்குப்போய் எட்டு மணிவரை இருந்து படித்தால் தான் ஏதாவது மண்டையில் ஏறும், அப்பதாண்டா நல்ல மார்க்கு வாங்க முடியும், நல்ல மார்க்கு வாங்கினாதான் பெரிய கலெக்டர் ஆகி நாட்டையே ஆளமுடியும்” என்று திட்டிக்கொண்டே அவனை டியூசனுக்கு விரட்டிவிடுவதிலேயே குறியாக இருந்தார்கள் அவன் அம்மா.இந்த அடிதடியை எல்லாம் அரை உறக்கத்தில் பார்த்துக் கொண்டிருந்தான்  பிரைன்.

“அம்மா, என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள் பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள். என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளும் ஆளுகைசெய்துவருகிறார்கள்.

அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள் என்று நீதிமொழிகள் 8-ம் அதிகாரத்தில் கர்த்தரைத்தேடினால் கிடைக்கும் ஞானத்தைப்பற்றி எழுதியுள்ளதே, நீங்கள் அண்ணனை வேதம் வாசித்து ஜெபம் கூட செய்யவிடாமல் வெறும் படிப்பு படிப்பு என்றே இப்படி அதிகாலையிலேயே துரத்துகிறீர்களே, அவன் கடவுளை மறந்து கிடைக்கும் வெறும் படிப்பை வைத்து அவனுக்கு என்ன பிரயோஜனம்?” என்று மூச்சுவிடாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த பிரைனை பிடித்து ஒரு தள்ளு தள்ளிவிட்டு சமைப்பதற்காக சமையலறைக்குள் வேகமாக சென்றார்கள் அவனுடைய அம்மா.

என் அம்மாவைப்போன்ற ஆட்களை சொல்லிப்புரிய வைவ்பது மிகவும் கடினம் என்று மனதுக்குள் நொந்து கொண்டு ஜெபிப்பதற்காக எழுந்து அறைக்குள் சென்றான் பிரைன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !! Use Download button in the bottom.