நாளைக்காக கவலைப்படாதிருங்கள்

அது மாதத்தின் முதல் வாரமாக இருந்ததால் பிரைனின் அப்பா அவர் வாங்கின சம்பளத்தைத் தண்ணீராக செலவழித்துக்கொண்டிருந்தார்.

அவருடைய செலவில் பெரும்பாலானவை தேவயற்ற வீண்செலவுகளே. முதல் வாரம் எப்பொழுதுமே அதிக ஆடம்பரமான வாரமாக இருந்தது பிரைனின் வீட்டில். ஆகவே ஓவ்வொரு மாதமும் கடைசி இரண்டு வாரங்களும் பணக்குறைவும் பற்றாக்குறைகளும் அதிகமாகவே காணப்படும்.

சில மாதங்களாக இதை கவனித்த பிரைன் அவன் அப்பாவிடம் போய் “ஏன் அப்பா முதல் வாரத்தில் கண்டபடி செலவு செய்துவிட்டு கடைசி வாரங்களில் கஷ்டப்படுகிறீர்கள்” என்றான்.

அவன் அப்பா அவனைப்பார்த்து “நாளைக்காக கவலைப்படாதிருங்கள் நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும் என்று மத்தேயு 6:34-ல் எழுதப்பட்டுள்ளதே பின்னை ஏன்டா நான் நாளையதினத்தைக் குறித்து கவலைப்பட்டுக்கொண்டு இன்றைய தினத்தின் மகிழ்ச்சியை குறைக்கவேண்டும்” என்றார்.

பிரைன் சற்று யோசித்துவிட்டு சொன்னான் “அப்பா தன் எதிர்காலத்தை கடவுள் நடத்துவார் என்று விசுவாசமில்லாமல் தேவையில்லாமல் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்காக சொல்லப்பட்ட வசனம் அது.

இருப்பதையெல்லாம் முட்டாள் தனமாக செலவழித்து நாசமாக்க வேண்டும் என்பதல்ல அதன் பொருள்.குழந்தை பிறந்தவுடனேயே இவனை எப்படி நான் உயர்படிப்பு படிக்க வைப்பேன் என்று புலம்புபவர்களுக்காக சொல்லப்பட்ட வசனம் இது. அதை நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள்.

வீடு கட்டுபவர்கள் அந்த வேலையை தொடங்குவதற்கு முன்பே அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?(லூக் 14:30) என்றும் வசனம் சொல்லுகிறதே?

குடும்பம் என்ற வீட்டை கர்த்தர் உங்கள் கையில் தந்திருக்கிறாரே உங்கள் மாத வருமானத்தை ஒரு மாதமளவும் வைத்து எப்படிச் செலவு செய்யவேண்டும் என்று நீங்கள் கொஞ்சம் கூட கணக்குப்பார்க்காமல் இடத்திற்குச் செலவு செய்துவிட்டு கர்த்தர் நாளையதினத்தைப் பற்றி கவலைப்படச்சொல்லவில்லை என்று உங்கள் கையாலாகாதனத்தை கர்த்தர் மேல் பழியாக போடுகிறீர்களே” என்று சொல்லிக் கொண்டே சென்ற பிரைனை ஒரு அடிகொடுத்து பேசாமல் போயிருந்து பாடங்களை படிக்கும்படிக்குத் துரத்திவிட்டார் அவன் அப்பா.

குடும்பத்தையும் குடும்பச்செலவுகளையும் நடத்துவதெப்படி என்ற பாடத்தை இன்னும் படித்து முடிக்காத அப்பாவை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே கவலையோடு சென்றான் பிரைன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !! Use Download button in the bottom.