பிரைனின் அப்பாவும் அவருடைய நண்பர்கள் சிலரும் ஒன்றாக அமர்ந்து அவனுடைய வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் தீர்க்கதரிசி என்ற பெயரை நண்பர்கள் மத்தியில் பெற்றவர்.

அந்த சமயம் அவர்களின் இன்னொரு நண்பர் சோகமே உருவான முகத்தோடு வந்து அவர்கள் மத்தியில் அமர்ந்தார்.

நீங்கள் ஏன் மிகவும் சோர்ந்து காணப்படுகிறீர்கள்? என்று கேட்டதற்குää நான் செய்யும் காரியங்கள் எல்லாமே தோல்வியாகத்தான் முடிகிறது, பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகள், நஷ்டத்திற்கு மேல் நஷ்டம்ää பல வழிகளிலும் நெருக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்று கூறி பெருமூச்சு விட்டார் அவர்.

உடனே, தீர்க்கதரிசி என்று பெயரெடுத்த நண்பர் அவரைப் பார்த்து, “கர்த்தர் தெளிவாக என்னிடம் கூறுகிறார், நீங்கள் எதைக்குறித்தும் இனி கவலைப்பட வேண்டியதில்லை,

உங்கள் பிரச்சனைகள் எல்லாம் ஒரே நாளில் மாறிவிடும், உங்கள் எல்லா கஷ்டங்களும் இன்னும் சில நாட்களில் காணப்படாமல் போய்விடும், எல்லா நெருக்கங்களும் உங்களை விட்டு மாறிவிடும்” என்று கூறினார்.

அதைக்கேட்டு ஆறுதலடைந்த அந்த நண்பர் சற்று நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அவர் சென்றவுடன் தீர்க்கதரிசனம் கூறிய நண்பரைப்பார்த்து பிரைன், மாமா அவர் பல வேண்டா வேலைகளையும் கர்த்தருக்குப் பிரியமில்லாத காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறார் என்று ஊரார் அனைவருக்கும் தெரியுமே.

உங்களிடம் உண்மையாகவே கர்த்தர் அப்படி சொல்லச் சொன்னாரா? என்று கேட்டான்.

அதற்கு மாமா, அந்த நண்பர் அப்படிப்பட்டவர் என்று எனக்கும் தெரியும், ஆனாலும் என்னுடைய மனம் அப்படிச்சொல்லத் தூண்டியது,

இதில் என்ன தவறு இருக்கிறது? அவர் என்னுடைய பதிலில் திருப்தி அடையத்தானே செய்தார் என்று எதிர் கேள்வி எழுப்பானார்.

சற்று அதிர்ச்சியடைந்த பிரைன், “மாமா நீங்கள் எசேக்கியேல் 13-ம் அதிகாரத்தை ஒரு நாளும் வாசித்ததில்லையா?

தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ! இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா? அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும். சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்@ நீங்கள் பொய்க்குச் செவிகொடுக்கிற என் ஜனத்துக்குப் பொய் சொல்லுகிறதினாலே சில சிரங்கை வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் என்னை என் ஜனத்துக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்குவீர்களோ?”

என்று வேத வசனங்களைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த பிரைனை, கடகடவென்று பிடித்து இழுத்து வீட்டிற்குள்ளே தள்ளிவிட்டார் அவன் அப்பா.

பொய்த்தரிசனங்களை கேட்டு நம்புபவர்கள் இருக்கும் வரைக்கும் இப்படிப்பட்ட கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் பஞ்சமிருக்காது என்று நொந்து கொண்டே உள்ளே சென்றான் பிரைன்.

Author: Bro. John Sam Raj