உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்பிவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்” சங்கீதம் 37:5

கிறிஸ்துவில் அன்பானவர்களே நம்முடைய வாழ்க்கையில் எதிர்பார்த்திருக்கிற சில நன்மைகள் கிடைக்காத போது அல்லது தாமதமாகும் போது மனசோர்வு நம்மை ஆளுகை செய்கிறது.

அந்த நேரத்தில் பல வழிகளிலும் நன்மையை அடைய முயற்சி செய்து பார்க்கிறோம். யாரிடத்தில் போனால் காரியம் வாய்க்கும் என்று யோசித்து பலரிடம் பல ஆலோசனைகளை கேட்டும் குழம்பி நிற்கிற சூழ்நிலைக்குத் தள்ளப் படுகிறோம்.

மேல் குறிப்பிட்ட கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது உன்வழியை

கர்த்தருக்கு ஒப்புவி என்று, நம்முடைய செயல்களை கர்த்தரிடத்தில்


ஒப்புவிக்கும் போது சூழ்நிலைக்கு ஏற்ற சரியான ஆலோசனையை கர்த்தர் தருவார்,

அதைதான் ஏசாயா 30:21-ல் வாசிக்கிறோம், “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாக சாயும்போதும் வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்கு பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்”.

நிச்சயமாகவே கர்த்தருடைய சமூகத்தில் எந்த வழியில் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை நாம் தொடர வேண்டும் என்ற தெளிவான ஆலோசனை நமக்கு கிடைக்கும்.

ஏனென்றால் அவருடைய நாமம் ஆலோசனைக் கர்த்தர். அவர் காட்டுகிற வழியில் நமக்குரிய நன்மைகள் நிச்சயம் கிடைக்கும், நம்முடைய காரியம் வாய்க்கும்.

கிறிஸ்தவ வாழ்க்கையில் கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பது மிக முக்கியம். நம்பிக்கை என்பது வெறும் பேச்சில் அல்ல செயலில் இருக்க வேண்டும்.

சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் பொது மட்டுமல்ல சாதகமாக இல்லாத போதும் கர்த்தர் மேல் உள்ள நம்பிக்கை பெருக வேண்டும்.

நாம் எதை அதிகம் கேட்கிறோமோ அல்லது சிந்திக்கிறோமோ அதன்மேல் தான் நம்முடைய நம்பிக்கை பெருகும்.

ஆகவேதான் சங்கீதம் 1:3-3-ல் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அதையே தியானித்து (சிந்தித்து) கொண்டிருக்க வேண்டும் என்று வேதம் அறிவுரை கூறுகிறது.

அந்த மனிதன் செய்யும் காரியம் எல்லாம் வாய்க்கும். வேத வசனத்தை தியானிக்கும் போது தான் கர்த்தர் மேல் உள்ள நம்பிக்கை அதிகமாகும்.

ஆகவே என் காரியம் கைகூடி வரவில்லையே என்று சோர்ந்து போகாதீர்கள். உங்கள் வழிகளை கர்த்தரிடத்தில் கேட்டு காத்திருங்கள். நிச்சயம் உங்கள் காரியத்தை கர்த்தர் வாய்க்கப்பண்ணுவார்.

“கர்த்தாவே என்னுடைய வழியை உமிடத்தில் ஒப்புவித்து, உம்மேல் நம்பிக்கையாயிருக்க கற்று தாரும்”

Author:

Bro. S. Nirmal,

Jesus With us Worship Centre,

Parvathipuram, Nagercoil.