ன் பக்கத்தில் ஆயிரம் பேரும், உன் வலது புறத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. சங்கீதம் 91:7

இந்த நாட்களில் நாம் அதிகம் கேள்விப்படுகிற ஒரு வார்த்தை “கொரோனா” என்ற வைரஸ் தான்.

இந்த வார்த்தை தான் உலக மக்கள் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் பலமுறை உச்சரிக்கின்றனர்.

தொலை காட்சிகள், செய்தித்தாள்கள், இணையதள ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்த கொடிய வைரசை குறித்து தான் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

நாளுக்கு நாள் இதனுடைய பாதிப்பும் பெருகி கொண்டே தான் போகிறது.

எங்கு பார்த்தாலும் மரண செய்திகளும், தொற்று வியாதியின் கோரமும் தான் கேள்விப்பட்டு கொண்டிருக்கிறோம்.

இந்த தொற்று வியாதி நம்மையும் தாக்கி விடுமோ என்ற அச்சமும் பலரை தொடர்ந்து பிடித்து கொண்டிருக்கிறது.

இந்த இக்கட்டான நிலையில் “இறைவன்” தான் மக்களை காக்க முடியும் என்று பகிரங்கமாக நாட்டை ஆள்பவர்கள் கூட ஒப்பு கொண்டுள்ளனர்.

ஆம் பிரியமானவர்களே தேவன் அறியாமல் ஒரு அணு கூட இந்த பூமியில் அசைவதில்லை கர்த்தரை நம்புகிற தேவபிள்ளைகளுக்கு அவரே அடைக்கலமாக இருக்கிறார்.

ஆகவே அவர் அறியாமல் உங்கள் தலைமயிரில் ஓன்று கூட கீழே விழ முடியாது.

எங்கள் பட்டணத்தில், நாட்டில், கிராமத்தில், தெருவில் நுழைந்திருக்கும் இந்த தொற்று வியாதி என்னையும் தாக்கி விடுமோ என்ற அச்சத்திலிருக்கும் உங்களைப் பார்த்து கர்த்தர் சொல்லுகிறார், உன் பக்கத்தில் ஆயிரம் பேரும், உன் வலது புறத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் அது “உன்னை” அணுகாது என்று. இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் வாதைகளுக்கு எதிராக செயல்படுகிறது.அது எல்லா கிருமி நாசிகளை விட வலிமையானது.

ஆகவே இந்த சூழ்நிலையில், அதிகமாக கர்த்தருடைய வார்த்தையை உட்க்கொள்ளுங்கள், ஜீவத்தண்ணீராம் ஆவியானவரை அனுதினமும் பருகுங்கள்.

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் உங்கள் உள்ளமும், குடும்பமும் சுத்திகரிக்கப்படட்டும். நிச்சயம் வாதை உங்கள் கூடாரத்தை அணுக முடியாது.

எகிப்தியருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் வித்தியாசத்தை காண்பித்த தேவன் இந்த நாட்களில் உங்களுக்கு அற்புதங்களை செய்வாராக. ஆமென்.

கர்த்தரின் நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான்.

Author:

Bro. S. Nirmal,

Jesus With us Worship Centre,

Parvathipuram, Nagercoil.