மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள் சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக்கியேல் 18:32

மனிதனின் பயணம் நித்திய மரணம் அல்லது நித்திய ஜீவன் இவ்விரண்டில் எதோ ஒன்றை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.

சரீர மரணத்திற்கு பிறகும் வாழ்வு இருக்கிறது என்று கூறினால் பலரும் அதை ஏற்று கொள்ளுவதில்லை.

நாம் உலகத்தில் வாழும் போது எல்லாவற்றையும் அனுபவித்து விடவேண்டும் என்றுதான் அநேகர் விரும்புகின்றனர்.

மனிதர்கள் ஒருவரும் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்றே தேவன் அவருடைய ஒரே பேரான குமாரனாகிய “இயேசு கிறிஸ்துவை” பூமிக்கு அனுப்பி இவ்வளவாய், மனித குலத்தின் மேல் அன்பு கூர்ந்தார்.

இயேசு கிறிஸ்து மற்றும் அவரை இவ்வுலகத்தில் முன்மொழிந்த யோவான் ஸ்நானகனின் முதல் பிரசங்கம் “மனந்திரும்புங்கள்” என்பது தான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட விதத்தில் மனந்திரும்புதல் அவசியம். பாவம் செய்கிற ஆத்துமா சாகும் என்று வேதம் கூறுகிறது.

நம்முடைய ஆத்துமாவுக்கு வேறு நபரின் ஜெபமோ, பரிசுத்த வாழ்க்கையோ உதவ முடியாது.

நாம் மனந்திரும்பினால் தான் நம்முடைய ஆத்துமா பிழைக்கும்.

பாதாளத்திற்கு நேராக சென்று கொண்டிருக்கிற ஆத்துமாவின் சாவை தேவன் விரும்பவில்லை.

தன்னுடைய பாவத்தை அறிக்கையிட்டு அதை விட்டுவிலகும் மனந்திரும்புகிற ஆத்துமா வாழ்வடையும்.

பாவத்தை மன்னிக்கும் ஆற்றல் உடைய உலக மக்களின் பாவத்தை சுமந்து தீர்த்த இயேசு கிறிஸ்து பாவிகளை இரட்சிக்க தான் தன்னுடைய ஜீவனை தந்தார்.

என்னுடைய மூதாதையர் செய்த பாவம் தான் எனக்கு சாபமாக இருக்கிறது என்று சாக்கு போக்கு சொல்லி கொண்டு இருக்காதீர்கள்.

நீங்கள் மனந்திரும்பினால், சாபத்தை உடைத்த இயேசு உங்களை நலமாய் வாழவைப்பார். ஆமென்

மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சாமீபமாயிருக்கிறது.

Author:

Bro. S. Nirmal,

Jesus With us Worship Centre,

Parvathipuram, Nagercoil.